fbpx
Homeபிற செய்திகள்வருவாய் தீர்வாயம் நிறைவு நாளில் 138 பேருக்கு ரூ.1.60 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்:...

வருவாய் தீர்வாயம் நிறைவு நாளில் 138 பேருக்கு ரூ.1.60 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்: கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் 1434 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி நிறைவு நாள் மற்றும் விவசாயிகளின் குடிகள் மாநாடு நேற்று (27ம் தேதி) நடைபெற்றது.


பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்ததாவது:
கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 22.05.2025 முதல் 30.05.2025 வரை 1434- ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் நடைபெற்றுள்ளது.

இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச்சான்று உள்ளிட்ட பல் வேறு அரசின் சேவைகள் பெற பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.


மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22,23 மற்றும் 27.05.2025 வரை 3 நாட்கள் வரு வாய் தீர்வாயம் நடைபெற்றது. குறிப்பாக மண்மங்கலம் வட்டத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் முதல் நாளான (22.05.2025) அன்று வாங்கல் குறுவட்டத்திற்குட்பட்ட நஞ்சை கடம்பங்குறிச்சி, புஞ்சை கடம்பங்குறிச்சி, நன்னியூர், வாங்கல் மற்றும் குப்புச்சி பாளையம் ஆகிய வருவாய் கிராம பொதுமக்களி டமிருந்து 34 மனுக்களும், இரண்டாம் நாளான 23ம் தேதி அன்று மண்மங்கலம் குறு வட்டத்திற்குட்பட்ட நெரூர் (வடபாகம்), நெரூர் (தென்பாகம்), மின்னாம்பள்ளி, மண்மங்கலம், ஆத்தூர், காதப்பாறை, பஞ்சமாதேவி, கோயம்பள்ளி,
சோமூர் மற்றும் அச்சமாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களிடமிருந்து 67 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது.


மூன்றாம் நாளான இன்று (நேற்று) ஆண்டாங்கோவில் கீழ்பாகம் மற்றும் மேல்பாகம், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம் மற்றும் தாளப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களிடமிருந்து 50 கோரிக்கை மனு க்கள் பெறப்பட்டுள்ளது.


பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு வழங்கப் பட்டு, தகுதியுடைய மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அறிவு றுத்தப்பட்டுள்ளது.


அந்த வகையில் இறுதி நாளான இன்று நடைபெற்ற குடிகள் மாநாட்டில் வருவாய் துறையின் சார்பாக முதியோர்/மாற்றுத்திறனாளிகள்/விதவை உதவித்தொகை 103 பயனாளி களுக்கு ரூ.1,59,84,000 மதிப்பீட் டிலும், இயற்கை மரணம் உதவித் தொகை 3 பயனாளிகளுக்கு ரூ.62,500 மதிப்பீட்டிலும், 3 பயனாளி களுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளும், பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக 3 பயனாளிகளுக்கு ரூ.22,552 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்களும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பாக 3 பயன £ளிகளுக்கு ரூ.9,855 மதிப்பீட்டில் காதொலி கருவிகளும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பாக 20 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளும், வேளாண் துறையின் சார்பாக 1 பயனாளிக்கு தென்னங்கன்றும், தோட்டக்கலை துறையின் சார்பாக 1 பயனாளிக்கு மகாகனி மரக் கன்று என மொத்தம் 138 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 60 இலட்சத்து 78 ஆயிரத்து 907 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் நில அளவை பிரிவு உதவி இயக்குநர் முத்து ச்செல்வி, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (பொது) சிவக்குமார், மண்மங்கலம் வட் டாட்டசியர் மோகன்ராஜ், கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் ராஜாமணி, மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img