fbpx
Homeபிற செய்திகள்சிங்கப்பூரின் பிரபல பர்னிச்சர் நிறுவனம் கோவையில் துவக்கம்

சிங்கப்பூரின் பிரபல பர்னிச்சர் நிறுவனம் கோவையில் துவக்கம்

சிங்கப்பூரின் ஹோம்ஸ் டூ லைப் நவீன பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனமானது, கோவையில் தனது ஃபிராஞ்சைஸ் ஷோரூமை ஹோம் சோன் என்ற பெயரில் ஜி.என் மில்ஸ், மேட்டுப்பாளையம் ரோடு என்ற முகவரியில் நேற்று துவங்கியுள்ளது.


இந்த ஷோரூம், கோவையின் முக்கியமான ஷாப்பிங் இடத்தில் இருப் பதால் நாள்தோறும் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் வருகை தருகின்றனர்.
இந்த புதிய தொடக்கம், இந்தியாவில் அதன் ஃபிராஞ்சைஸ் வலையத்தை விரிவுபடுத்தும் முக் கியமான கட்டமாகும்.


தனித்துவமான வாழ்க்கை தரத்தை விரும் பும் இந்தியக் குடும் பங்களுக்கு மிக
நுண்ணிய வடிவமைப்பு மற்றும் சிறந்த சேவைகளை நேரடியாக வழங்க ஹோம்ஸ் டூ லைப் உறுதியாக உள்ளது.


கோவை மக்கள் நிச்சயம் நம்முடைய நுணுக்கமான தேர்வுகளை விரும்புவார்கள் என்ற நம்பிக்கை நமக்குள்ளது என்று நிறுவனத்தின் உலகளாவிய பிராண்ட் தலைவர் செலெஸ்டெ புஹா தெரிவித்தார்.


இந்த ஷோரூமில் சோஃபாக்கள், டைனிங் செட்கள், படுக்கையறை, உபகரணங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் உள்ளன.


இவை அனைத் தும் நவீன அழகு, உடலுக்கு உகந்த வசதி மற்றும் நுட்பமான தயா ரிப்பு நுணுக்கங்களை பிரதி பலிக்கின்றன.

படிக்க வேண்டும்

spot_img