எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதே போல கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே கரூர் மாவட்ட அதிமுக அவைத்தலைவர் வி.கா. தலைமையில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



