விருதுநகர் சாத்தூர் ரோட்டில் மாணிக்கம் தாகூர் எம்.பி.
சூலக்கரை கிராம காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கொடி ஏற்றி வைத்தார். வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகி வீரபாண்டி, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி திவாகர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது அதிமுகவிலிருந்து விலகி பட்டாசு மாரியப்பன் தலைமையில் ஆறு பேர் காங்கிரஸில் இணைந்தனர்.
காங்கிரஸ் நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, சிவகுருநாதன், வக்கீல் வீராச்சாமி, ஏசுக்கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



