fbpx
Homeபிற செய்திகள்சோனா கல்வி குழுமத்தில் விளையாட்டு விழா

சோனா கல்வி குழுமத்தில் விளையாட்டு விழா

சோனா கல்வி குழுமத் தின் அங்கமான சோனா தொழில்நுட்பக் கல்லூரி சோனா கலை அறிவியல் கல்லூரி, சோனா இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர் களுக்கான விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடை பெற்றது.
கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமை தாங்கினார்.

சோனா கல்வி குழுமத்தின் துணைத் தலைவர் தியாகு வள்ளியப்பா முன்னிலை வகித்தார் . முதன்மை விருந்தினராக தமிழ்நாடு மாநில நடுவர் குழுவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் கார்ப் பரேட் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகரான ஜெயராமன், சிறப்பு விருந்தினராக சோனா கல்லூரியின் முன்னாள் மாணவர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் பிரதீப் ஆகியோர், விளை யாட்டு துறையில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

சோனா கல்வி குழுமத்தின் சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சுழற்கோப்பை

மண்டல மாநில தேசிய அளவிலான பழுதூக்குதல், சதுரங்கம், கைப்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் பேட்மிண்டன், தேக்வாண்டோ, பிரிவுகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

சோனா சுலவி குழுமத் தின் முதல்வர்கள் வீ.கார்த்திகேயன், எஸ். ஆர்.ஆர். செந்தில் குமார், ஜீ.எம் காதர்நவாஷ், இ.ஜெகவிதா ஆகியோர் பங்கேற்றனர்.
விளையாட்டு விழா ஏற்பாடுகளை விளையாட்டுத் துறை இயக்குநர்கள் கவிதாஸ் ஸ்ரீதரன் அனிதா ஆகியோர் சிறப்பாக செய் திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img