முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி வாலாஜா பேருந்து நிலையம் மற்றும் வாலாஜா தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் அவரது உருவப்படத்திற்கு திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலத் துணைச் செயலாளர் ஆர்.வினோத் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து , பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் தில்லை, நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமல் ராகவன், நகர துணை செயலாளர்கள் இர்பான், நந்தகுமார், குணசெல்வி சிவந்தி, மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.