கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரத்தின் பிறந்தநாளை ஒட்டி, கோவை புலியகுளம் விநாயகர் கோவில், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் ஆகிய இடங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் மாநகர் மாவட்ட தலைவர் எம்எஸ் பார்த்திபன் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஹரிஹரசுதன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இந்தநிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான எம்.என்.கந்தசாமி கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார்.
விழாவில் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர் திருமூர்த்தி, சர்க்கிள் தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



