fbpx
Homeபிற செய்திகள்பள்ளியில் குழந்தைகள் தினவிழா

பள்ளியில் குழந்தைகள் தினவிழா

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள டி.சவேரியார்புரம் புனித சேவியர் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற குழந்தைகள் தின விழாவிற்கு பள்ளி தாளாளர் குழந்தை ராஜன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை மரிய செல்வராணி, வர வேற்புரையாற்றினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஓட்டப்பிடாரம் கிழக்கு ஓன்றிய திமுக செயலாளரும் லயன்ஸ் கிளப் தலைவருமான காசி விஸ்வநாதன் பரிசுகள் வழங்கினார். விழாவில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் நைஸ் பரமசிவம், லயன்ஸ் கிளப் செயலாளர் டேவிட், துணைத்தலைவர் ஜான் கென்னடி ராஜன், பொருளாளர் விக்னேஷ் ஜெயபால், இயக்குநர் விமல் ஆனந்த், உள்பட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img