Homeபிற செய்திகள்காந்தல் குருசடி திருத்தல பரிகார பவனி

காந்தல் குருசடி திருத்தல பரிகார பவனி

நீலகிரி மாவட்டம் காந்தல் காந்தல் குருசடி திருத்தலத்திற்கு திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் இருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட பரிகார பவனி நிகழ்ச்சிக்கு உதகை பிஷப் டாக்டர் ஏ.அமல்ராஜ் தலைமை தாங்கினார். பவனியை திரு இருதய பேராலயத்தில் பங்கு தந்தை ரவி லாரன்ஸ் தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் சுமார் 6 கிலோமீட்டர் தூரமுள்ள குருசடிக்கு நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்றது. இதில் நீலகிரி ஈரோடு, கோவை, மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின் முடிவில், கிறிஸ்துவின் பாடுகளை தியானிக்கும் சிலுவைப் பாதை நடைபெற்றது, தொடர்ந்து உதகமண்டலம் மறை மாவட்டஆயர் டாக்டர் ஏ.அமல்ராஜ் சிறப்பு ஆசீர்வாதம் வழங்கினார். இதில் உதகை மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், குருசடி திருத்தல அதிபர் அருட்தந்தை.ஜெயக்குமார் மற்றம் ஏராளமான குருக்களும் அருட் சகோதரிகளும் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img