கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியில் வனத்துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு வனத்தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கு கம்பம் கிழக்கு ரேஞ்சர் பிச்சைமணி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது கோடைக்காலங்களில் காட்டுத்தீ பரவாமல் தடுக்க பொதுமக்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் செல்லும் போது புகைப்ப்பிடிப்பது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை விட்டு செல்வதை தவிர்க்க வேண்டும். வனப்பகுதிக்கு அருகில் உள்ள பட்டா நிலங்களில் தீ வைப்பவர்கள் முன்பே வனத்துறையில் அனுமதி பெறுவது அவசியம். காட்டுத்தீ குறித்த தகவல் அறிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் காட்டுத்தீ ஏற்படும்போது வனத்துறையுடன் இணைந்து தன்னார்வர்லர்கள் காட்டு தீ கட்டுப்படுத்துவது குறித்தும், தீ தடுப்பு கோடுகள் குறித்து விளக்கினர்.
இதில் வனத்துறை பணியாளர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.