fbpx
Homeபிற செய்திகள்தேனியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி: 120 வீரர்கள் பங்கேற்பு

தேனியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி: 120 வீரர்கள் பங்கேற்பு

தேனியில் நீச்சல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நான்காவது ஜூனியர், ஒன்பதாவது சீனியர் பிரிவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம், கேடயம் வழங்கப்பட்டது. 

முன்னதாக இந்த நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் சஜீவனா கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் தேனி மாவட்ட வழக்கறிஞர் எம்கேஎம் முத்துராமலிங்கம் மற்றும் வெளிச்சம் அறக்கட்டளை சிதம்பரம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தேனி மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் டெக்னிக்கல் இயக்குனர் ரவி ராஜன் மற்றும் நீச்சல் வீரர்களின் மாற்றுத்திறனாளி மாவட்ட செயலாளர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டிக்கு 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து120 வீரர்கள் கலந்து பங்கேற்றனர். 

படிக்க வேண்டும்

spot_img