ஸ்ரீவில்லிபுத்தூர், கலச லிங்கம் பல்கலையில், 39-வது பேட்ச், 2023-2024 பி.டெக், இன்ஜினியரிங் மாணவர்களுக்கான பத்து நாள் புத்தாக்கப் பயிற்சி துவக்க விழா நடந்தது.
பல்கலை வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமை தாங்கி பேசிய தாவது:
மாணவர்கள் இன்று சேரும் நாளில் முக்கிய குறிக்கோள்களான, பேராசிரியர்களாக வேண்டும், கம்பெனியில் வேலைக்கு சேரவேண்டும், அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும், குடும்பத் தொழிலிலோ, அல்லது புதிய சுய தொழிலிலோ ஈடுபடவேண்டும் ஆகிய நான்கில் ஏதாவது ஒன்றை நோக்கி நான்கு ஆண் டுகளில் பல்கலையில் தரப் படும் பயிற்சிகளையும், வாய்ப்பையும் பயன்படுத் தினால் உறுதியாக வெற்றி பெறமுடியும் என்றார்.
இணைவேந்தர் டாக்டர் எஸ்.அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர்கள் முனைவர் எஸ்.சசி ஆனந்த், எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
துணைவேந்தர் எஸ். நாராயணன் வரவேற்றார்.
பதிவாளர் வே.வாசு தேவன், பல்கலை டீன், டைரக்டர்கள், துறைத்தலைவர்களை அறிமுகப்படுத்தினார். முதலாண்டுத்துறை டீன் என்.ரஜினி பத்து நாள் பயிற்சிகளை விவரித்தார்.
சிறப்பு விருந்தினர் சென்னை கொடாய்டு இன்னவேசன் கம்பெனி பிசினஸ் ஆப்ரேசன் இயக்குநர் டி.ராம்சந்தர், புத்தாக்கப் பயிற்சிகளை துவக்கி வைத்து, இன்றைய தொழிற்சாலைகளில் கணிணி, தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்களின் முக்கிய பங்கு பற்றியும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி பற்றியும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
துணைத்தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் பேசுகையில், மாணவர்கள் மொத்தம் தேவையான பாடத்திட்ட கிரடிட்களை தங்கள் விருப்பப்படி முன்பே படிக்கலாம் என்றார்.
மாணவர் சேர்க்கை அதிகாரிகள் டீன் ஏ.லிங்குசாமி, ஜி.ராஜூ பேசினார்.
மாணவர் நலஇயக்குநர் சாம்சன் நேசராஜ் நன்றி கூறினார்.



