fbpx
Homeபிற செய்திகள்பழங்குடியினர் பள்ளிகளுக்கு மின் விளக்குகள், புத்தகங்கள்: ‘இனி ஒரு விதி செய்வோம்’ அறக்கட்டளை வழங்கியது

பழங்குடியினர் பள்ளிகளுக்கு மின் விளக்குகள், புத்தகங்கள்: ‘இனி ஒரு விதி செய்வோம்’ அறக்கட்டளை வழங்கியது

உடுமலைப்பேட்டை பகுதியில் மூன்று பழங்குடியினர் கிராம குடியிருப்புப் பள்ளிகளின் கல்வி மற்றும் பிற தேவை களுக்காக இனி ஒரு விதி செய்வோம் டிரஸ்ட் மூலம் சோலார் விளக்குகள், பள்ளிப் பைகள், ஆங்கிலம், தமிழ் மற்றும் கணிதப் புத்தகங் கள், பொருட்கள், விளையாட்டு மற்றும் பொம்மைகள் ஆகியவற்றை நன்கொடை யாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த பழங்குடியின கிராமங்களுக்கு ரூ.30,000 மதிப்பிலான பொருட்கள் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை நிறுவனர் கவிதா ஜெனார்த்தனன் மற்றும் உறுப்பினர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்-.

படிக்க வேண்டும்

spot_img