இந்தியன் பிளம்பிங் அசோசியேஷன் (ஐபிஏ), நீர் பாதுகாப்பு முயற்சிகளை முன்னின்று நடத்தும் உயர் அமைப்பான ‘ஐ சேவ் வாட்டர்’ அமைப்பும் இணைந்து சென்னை பெசன்ட் நகர் ஓல்காட் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் வரும் செப்டம்பர் 3-ம் தேதி ‘நீராத்தான்’ போட்டியை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளன.
ஐபிஏ சென்னை அமைப்பின் முன்னாள் தலைவரும், ஐபிஏ தேசிய செயற்குழு உறுப்பினருமான டாக்டர் எஸ்.வீரப்பன், நீராதானின் கன்வீனர் சுஜல் ஷா ஆகியோர் தண்ணீரைப் பாதுகாப்பதில் மேற்கொண்ட முயற்சிகளை பகிர்ந்தனர்.
10 கி.மீ. (நேர ஓட்டம்) 5 கி.மீ. (நேர ஓட்டம்), 3 கிமீ வேடிக்கை ஓட்டம் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த தண்ணீர் பாதுகாப்பிற்கான ஓட்டம் நடைபெற உள்ளது.
ஐபிஏ தலைவர் குர்மித் சிங் அரோரா கூறுகையில், தண்ணீரைச் சேமிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பெங்களூரு, சென்னை, அகமதாபாத், புதுதில்லி, மும்பை ஆகிய 5 முக்கிய நகரங்களில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரைப் பாதுகாப்பதற்காகவும், அதற்கான விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஐபிஏ நீராதானனைத் திட்டமிட்டுள்ளோம். இது சென்னை நகரவாசிகளுக்கு நீர்த் திருவிழா போல் செய்யப்படும் என்றார் டாக்டர் எஸ்.வீரப்பன்.
தண்ணீரை திறமையாகப் பயன்படுத்துவதன் அவசியத்தைப் பற்றி மக்களுக்கு கற்பிப்பதில் கவனம் செலுத்தும் ஒரு முயற்சியாகும் என்றார் சுஜல் ஷா.
ரோட்டரி இந்தியா மிஷன், ரோட்டரி மாவட்டம் 3232 ஹைட்ரோதான் முன் முயற்சி போன்ற பல்வேறு இயங்கும் குழுக்கள் மற்றும் நிறுவனங்களால் ஐபிஏ நீராத்தான் சென்னை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.