மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறு முகை இரும்பறை ஊராட்சிக் குட்பட்ட பெத்திக்குட்டை முதல் தெற்கு சுரடுவரை 2 கி.மீ தூரம் கடந்த ஜூன் மாதம் ரூ.1.04 கோடி மதிப்பில் சாலை போடப்பட்டது. இச்சாலை யை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சாலையில் சரியான அளவில் ஜல்லி, மணல் கலவைகள் பயன்படுத் தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார். தொடர்ந்து பெள்ளாதி ஊராட்சிக்குட்பட்ட வெண்மணி நகர் பகுதியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தி திட்டத்தின் கீழ் 31 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு வீடும் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. இதேபோல் மொங்கம்பாளையம் பகுதியில் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 27 வீடுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து தரமானதாகவும், அதே வேளையில் விரைந்து முடிக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
இது குறித்து பயனாளிகள் கூறுகையில், “வீடுகள் இன்றி தவித்து வந்தோம். கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் கிடைத்ததால் எங்கள் கனவு நிறைவேறி உள்ளது. தற்போது எங்களது மனம் நிறைந்துள்ளது” என்றனர்.
ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் ஸ்வேதா சுமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பூபதி(எ) குமரேசன், ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து நிருபர் களிடம் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: நிறைந்தது மனம் என்ற தலைப்பின் கீழ் காரமடை ஒன்றியத் திற்குட்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் நிறைவடைந்த வளர்ச்சி திட்டபணிகளை ஆய்வு செய்தேன்.
ஊராட்சிகளில் 100% அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக குடிநீர், சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஊராட்சிகளில் 1200க்கும் மேற்பட்ட பயன £ளிகள் தேர்வு செய்யப் பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதேபோல், பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 2,000 பேர் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் வீடுகளை சீரமைக்கும் பணிகளுக்காக சிறிய அளவிலான சேதத்திற்கு ரூ.32 ஆயிரம். பெரிய அளவிலான சேதத்திற்கு அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளின் அனைத்து தேவைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.
மனுக்கள் மீதான தீர்வுகள் குறித்து ரேட்டிங் எடுக்கப்படுகிறது. இந்த ரேட்டிங் அடிப்படையில் அதிகாரிகளிடம் மனுக்கள் மீதான தீர்வுகள் குறித்து விளக்கம் கேட்கப்படுகிறது. பள்ளி மேலாண்மை குழுக்களை மக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனை பள்ளி கல்வித்துறையும் கண்காணித்து வருகிறது.
மாவட்ட அளவில் பள்ளி பிரச்னைகளுக்கு நாங்கள் தீர்வு காண்கிறோம், மாநில அளவிலான தீர்வுகளுக்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கிறது. அதேபோல் நம்ம ஊரு நம்ம பள்ளி என்றஅமைப்பை தொடங்கி உள்ளோம். அதில் ஆன் லைன் வாயிலாக பள்ளிகளுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து தெரிவிக்கலாம்.
பள்ளி தொடர்பான தேவைகளுக்கு எந்த துறையை அணுகவேண்டும் என மக்கள் அலைக்கழிக்கப்படக்கூடாது என்பத ற்காகவே இந்த அமைப்பை ஆரம்பித்துள்ளோம்.
ஆன்லைன் வாயிலாக வே வேண்டிய உதவிகள் கிடைத்துவிடும்.
கிராவல் மண் கடத்தல் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யார் கடத்தினாலும் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



