அதிகளவில் காவியங்கள் எழுதி, 5-வது முறையாக உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் சென்னை பேராசிரியர் கலைப்புனிதன். செம்மொழி தமிழ் வளர்ச்சிக் கழக செயலா ளர் வழக்கறிஞர் பாபு விடுத்துள்ள செய்திக் குறிப் பில் கூறியுள்ளதாவது:
சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் கலைப்புனிதன். கடந்த 1993-ம் ஆண்டு முதல் ஏப்ரல் 2023-ம் ஆண்டு வரை கடந்த 30 ஆண்டுகளில் தமிழுக்கு தொண்டாற்றிய தொன்மையான புலவர்கள், கவிஞர்கள், சங்க கால மன்னர்கள், அரசி யல் தலைவர்கள், உலகம் போற்றும் உத்தமர் கள், போற்றுதலுக் குரிய அறிஞர்கள், உலக சாதனையாளர்கள், மக்களால் கொண்டாடப்பட்ட மாமனிதர்களின் வாழ்க்கையையும், அவரது சாதனைகளையும் பல்வேறு பணிகளையும் கவிதையாக தொகுத்து இதுவரை 50 காவியங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
இன்றைய தலைமுறையினரும் பாமர மக்களும் தெளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் காவியங்களை எழுதியுள்ளார். இவர் 50 காவியங்கள் உள்பட 135 நூற்களையும் எழுதியுள்ளார்.
இவரது 30 ஆண்டு கால எழுத்துப் பணி மூலம் வெளிவந்துள்ள அனைத்து காவியங்களையும் பட் டியலிட்டு, அவை வெளியான வருடம் மற்றும் இதர விபரங்களுடனும் உரிய சான்றுகளுடனும் லண்டனில் இருந்து வெளிவரும் கோல்டன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பு செம்மொழி தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
எங்களது பரிந்துரையை பரிசீலித்து பேராசிரியர் முனைவர் கலைப்புனிதன் தமிழல் எழுதியுள்ள 50 காவியங்கள் மூலம் உலகிலேயே அதிகமான காவியங்களை எழுதிய ஆசிரியர் என அவரை பாராட்டி சான்றிதழ் அளித்துள்ளதோடு, உலக சாதனை புத்தகத்தின் ஆசிய பதிப்பிலும் சாதனை விபரங்களை வெளியிட்டுள்ளது.
அதிக காவியங்கள் எழுதி சாதனைப் புரிந்துள்ள பேராசிரியர் கலைப் புனிதன், உலகிலேயே அதிக எம்.ஏ. பட்டங்கள் பெற்றவர். ஒரே அரசு பல்கலைக்கழகத்தில் அதிகமான பட்டங்கள் பெற்றவர்.
உலகிலேயே நீளமான கடிதத்தை எழுதியவர். உலக பொது மறையாம் திருக்குறளின் 1330 பாடல்களையும் மனப்பாடம் செய்து 5 மணி நேரம் 48 நிமிடத்தில் எழுதி உலக சாதனை என ஏற்கனவே நான்கு முறை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்தாவது முறையாக அதிக காவியங்கள் படைத்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பேராசிரியர் கலைப்புனிதனை தமிழறிஞர்களும், சாத னையாளர்களும், பொது மக்களும் பாராட்டி வருகின்றனர்.