fbpx
Homeபிற செய்திகள்மாணவர்களிடையேயான கால்பந்து போட்டி- தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி சாம்பியன்

மாணவர்களிடையேயான கால்பந்து போட்டி- தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி சாம்பியன்

பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி ஒருங்கிணைத்து, பள்ளி வளாகத்தில் நடத்தியது.

கொங்கு சகோத்யா பள்ளி 7ஏ மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இப்போட்டியில் 4 மாவட்டத்தில் இருந்து 24 பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 14 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்றனர்.

14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இறுதிப் போட்டியில் தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி முதலிடத்தையும், ஈரோடு வேளாளர் வித்யாலயா இரண்டாம் இடத் தையும் பிடித்தது.

19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இறுதிப் போட்டியில் தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளி முதலிடத்தையும், கள்ளக்குறிச்சி ஆக்ஸ்ஸாலிஸ் சர்வதேச பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தது.

தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளித் தலைவர் என்.அருள் ரமேஷ்,
தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், முதல்வர் பூனம் சியால் உள்ளிட்டோர் கால்பந்து போட்டியில் இரண்டு பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற பள்ளி மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img