பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் சேரிட்டிஸ் (PSG & Sons Charities) நிறுவனம், தனது 100 ஆண்டு தொண்டு சேவையை கொண்டாடும் வகையில், “காதம்பரி- 2026” என்ற நான்கு நாள் இசை விழாவை ஜனவரி 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை பிஎஸ்ஜி ஐஎம்எஸ் – ஆர் அரங்கத்தில் நடத்துகிறது.
இந்த இசை விழா, இந்தியாவின் கர்நாடக இசை, லைட் கிளாசிக்கல் மற்றும் நடனக் கலை மரபுகளை கொண்டாடும் வகையில் இருக்கும். பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் புகழ்பெற்ற கலைஞர்களும் பங்கேற்கும் சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைத்து நாட்களிலும் நிகழ்ச்சிகள் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை நடைபெறும். முன்பதிவு மூலம் இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
2ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று, பிஎஸ்ஜி கல்வி நிறுவன மாணவர்களின் “தர்ம ஸ்வரங்கள்” லைட் மியூசிக் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து, சிறந்த மாணவர் கலைஞர்களுக்கு “கலை சுடர் விருது” வழங்கப்படும்.
3ம் தேதி (சனிக்கிழமை) அன்று, பிஎஸ்ஜி மாணவர்களின் “தசாவதார தர்மம்“ என்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சியும், “யுவ கலாரத்னா விருது வழங்கும் விழாவும் நடைபெறும்.
பின்னர் ஸ்ரீமதி எஸ் ஐஸ்வர்யா மற்றும் குமாரி எஸ்.சந்தியாவின் “மதுர சங்கீதம்“ கர்நாடக இசைக் கச்சேரி நடைபெறும்.
4ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று, பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கர்நாடக இசைத் துறையினரின் “தர்ம மார்கம்“ இசை நிகழ்ச்சி நடைபெறும் அதனைத் தொடர்ந்து பத்ம ஸ்ரீ & பத்ம பூஷண் விருதுபெற்ற ஸ்ரீமதி சுதா ரகுநாதனின் சிறப்பு கர்நாடக இசைக் கச்சேரி நடைபெறும்.
5ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பிஎஸ்ஜி பள்ளி மாணவர்களின் “உள்ளம் உருகுதையா” கர்நாடக இசை நிகழ்ச்சியும், பின்னர் பிரபல பாடகர் டி.சத்ய பிரகாஷின் “தர்மம் தலைக்காக்கும்“ லைட் கிளாசிக்கல் இசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
“காதம்பரி-2026”இசை விழா மூலம், PSG & Sons’ Charities தனது கலை, கல்வி மற்றும் பண்பாட்டு சேவைகளின் நூற்றாண்டு பயணத்தை மக்களுடன் பகிர்கிறது. இலவச அனுமதி சீட்டுகளுக்கு கியூஆர் கோடை ஸ்கேன் செய்யலாம் அல்லது தொடர்பு எண்கள்: 98947 59934 / 87540 22880.



