fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் இணைந்து போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், தூத்துக்குடி மாநகராட்சி நியமன கவுன்சிலர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் பொறுப்பாளர்கள் ஷெர்லி, மோசஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img