Homeபிற செய்திகள்கோவையில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்...

கோவையில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சுமார் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில், 6,500 சதுர அடி பரப்பளவில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மைதானத்திற்கு அடிக்கல் நாட்டியிருந்தார். இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பணி முடிவுற்ற நிலையில் மைதானத்தைத் திறந்து வைத்துள்ளார்.

மைதானத்தை திறந்து வைத்ததுடன் அங்கிருந்த ஹாக்கி வீரர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 10,626 பயனாளிகளுக்கு ரூ.136 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ரூ.162 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக் கப்பட்ட அரசு கட்டிடங்களையும் அவர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹாக்கி மைதானத்தில் சர்வதேச போட்டிகளை நடத்த முயற்சிகள் நடைபெற்றுவருவதாக கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கணபதி ராஜ்குமார் எம்பி, மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார், மேயர் ரங்க நாயகி, ஆணையாளர் சிவகுருபிரபாகரன், கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின் வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு வனப்படை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டையில் ரூ.19 கோடி யில் கட்டப்பட்டுள்ள வனவிலங்குகள் இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவணக் காப்பகம் சேமிப்பகம் ஆகியவற்றை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

நிகழ்வில் எம்பிக்கள் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி ஈஸ்வரசாமி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, வனப் பாதுகாப்பு அலுவலர் சுப்ரியா சாகு உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img