ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா, ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்ஸ் கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தலைமைத்துவ சிறப்பு விருதுகள் 2025-இல் உயரிய கௌரவ விருதுகளைப் பெற்றுள்ளது.
இந்நிறுவனம், “ஒட்டுமொத்த டீலர் திருப்தி ஆய்வு” மற்றும் எஃப்ஏடிஏ “க்ரீம் டி லா க்ரீம் திருப்தி ஆய்வில்” 2025-இல் முதலிடங்களைப் பெற்று மதிப்புமிக்க பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், “விற்பனை அனுபவக் குறியீட்டில்” இத்தொழில்துறையில் முன்னணி பிராண்டுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.
ஒட்டுமொத்த டீலர் திருப்தி குறியீட்டில், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா 868 புள்ளிகளைப் பெற்றது. இது இந்தப் பிரிவின் சராசரி 771 புள்ளிகளை விட மிக அதிகமாகும்.
எஃப்ஏடிஏ டீலர்ஷிப் எக்ஸலன்ஸ் விருதுகள், ஆட்டோமொபைல் துறையில் மிக விரும்பப்படும் கௌரவங்களில் ஒன்றாகும். இவை, இந்தியாவின் ஆட்டோ ரீடெயில் துறையில் சிறப்பான செயல்திறன், புதுமை மற்றும் சிறந்த நடைமுறைகளை கௌரவிக்கின்றன.
ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி வினய் ரைனா கூறுகையில்,
“தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக எஃப்ஏடிஏ-ஆல் கௌரவிக்கப்படுவது எங்களுக்கு பெருமையான தருணம். இந்த சாதனை எங்கள் டீலர் கூட்டாளர்களின் நம்பிக்கையையும், ஆர்வத்தையும் கொண்டாடுகிறது” என்றார்
இந்த விருதுகள், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியாவின் நம்பகத்தன்மையையும், வாடிக்கையாளர் திருப்திக்கான நிறுவப்பட்ட நற்பெயரையும் மேலும் உறுதி செய்கின்றன.
222 நகரங்களில் சுமார் 550 விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய தொடர்பு மையங்களுடன், ஆட்டோமொடிவ் துறையில் புதிய சிறந்த தரநிலைகளை அமைப்பதில் இந்நிறுவனம் உறுதியாக உள்ளது.



