Homeபிற செய்திகள்கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் தொழில் இணைப்புகண்காட்சி: சர்வதேச பல்கலைக்கழகங்கள் பங்கேற்பு

கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் தொழில் இணைப்புகண்காட்சி: சர்வதேச பல்கலைக்கழகங்கள் பங்கேற்பு

கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் CPS Career Connect 1.0 – பல்கலைக்கழகக் கண்காட்சி -2025 நடைபெற்றது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் வளப்படுத்தும் நிகழ்வாக நடந்த இந்த கண்காட்சியில் 43க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன.

10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு liberal arts, பொறியியல், வணிகம், வடிவமைப்பு, சுகாதார அறிவியல், சட்டம் மற்றும் ஊடகம் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள படிப்புகளில் மாணவர்களுக்கு பல்வேறு கல்வித் துறைகள், தொழில்வாய்ப்புகள் மற்றும் சர்வதேச இணைப்பு வாய்ப் புகளை கண்காட்சியில் இடம் பெற்ற பல்கலைக் கழகங்கள் வழங்கின.

எதிர்காலக் கல்வி மற்றும் தொழில் பாதைகள் பற்றிய நுண்ணறிவு உரையாடல்களில் ஈடுபட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும், மாணவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் தொழில் பாதைகள் குறித்து ஆழமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கான அரிய தளமாகவும் இக்கண்காட்சி அமைந்தது.

கூடுதலாக, இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக் னாலஜி (அமெரிக்கா), கெட்ஜ் பிசினஸ் ஸ்கூல் (பிரான்ஸ்) மற்றும் தயானந்த சாகர் பல்கலைக்கழகம் போன்ற சர்வதேச நிறுவனங்களில் கிடைக்கும் வாய்ப்புகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

ஆசிரியர்களும், மாணவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் தொழில் பாதைகள் குறித்து ஆழமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல, அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு பள்ளிகளுக்கு இடையேயான தொடர்பு மற்றும் கற்றலுக்கான ஒரு உண்மையான தளமாக மாறி இருந்தது.

சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி புதுமையான கற்றல் சூழலை வழங்குவதற்கும், மாணவர்கள் தங்கள் திறனை ஆராய்ந்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கும் உதவும் பராமரிப்பு மற்றும் புதுமை நிறைந்த கற்றல்சூழலை வழங்குவதில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

இது போன்ற கண்காட்சிகள் மூலம் உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி மாணவர்கள் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகளை இப் பள்ளி நிர்வாகம் ஏற்படுத்தி தருவதோடு அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் குறிக்கோளுடன் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது.

படிக்க வேண்டும்

spot_img