Homeபிற செய்திகள்கோவையில் தென்னிந்திய ரோல்பால் போட்டி:தங்கப் பதக்கம் வென்றது திண்டுக்கல் மாவட்ட அணி

கோவையில் தென்னிந்திய ரோல்பால் போட்டி:தங்கப் பதக்கம் வென்றது திண்டுக்கல் மாவட்ட அணி

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ரோல்பால் போட்டிகளில் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற திண்டுக்கல் மாவட்ட அணி தங்கப் பதக்கத்தை கைபற்றியது.
கோவையில் தென்னிந்திய அளவிலான ரோல்பால் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி அந்தமான் போன்ற மாநிலங்களில் இருந்து மாணவ மாண விகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சார்பில் 12 மாணவர்களும் 12 மாணவிகளும் 17 வயதிற் குட்பட்ட பிரிவில் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில், ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக பயிற்சிபெற்ற மாணவர்கள் ஐந்து பேரும் மாணவிகள் நான்கு பேரும் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் மாணவர் சஞ்சய்குமார் கேப்டன் ஆக செயல்பட்டார், மாதேஷ்கண்ணன், ஜெயசூர்யா, ஜனகன் ,அஸ்வின் குமார் ஆகியோர்கள் அணியில் இடம் பெற்றிருந்தனர் அவர்கள் சிறப்பாக விளையாடி 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.
பெண்கள் பிரிவில் கிறிஸ்டினா, நட்சத்திரா, தர்ஷனாஸ்ரீமற்றும் பிரதிக்ஷா ஆகியோர் தமிழ்நாடு அணி சார்பில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.
இது தவிர 17 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் சபரிவாசன், ஜெயசூர்யா மற்றும் சுமித் ஆகியோர் திண்டுக்கல் அணி சார்பாக தமிழக அணியில் கலந்து கொண்டு விளையாடி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.
இதுபோல 17 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் தியோஸ்ரீ, ரமிதா மற்றும் அக்ஷய வர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அணி சார்பில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்கள்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தொடர்ந்து ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவ மாணவிகள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் சாதனை படைத்து வருவதற்கு பெற்றோர்கள் மனதார பாராட்டியதுடன், பயிற்சியாளர் மாஸ்டார் எம்.பிரேம்நாத் அவர்களுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்தினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img