ஈரோடு ஸ்ரீ அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட வேலை வாய்ப்பு துறை அலுவலர் சாந்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக எங் ப்ரோபஷனல் எஸ்.நரேந்திரன், கணினி துறைத் தலைவர் பேராசிரியர் பூபதி, மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர்ந்து அரசு போட்டி தேர்வுகளில் எவ்வாறு வெற்றி பெற வேண்டும்,அரசுத் துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகள், அதனை எதிர்கொள்ளும் வழிமுறை, அதற்கு தயாராகும் பயிற்சி, வேலைவாய்ப்பு அலுவலகம் எடுத்திருக்கும் முயற்சிகளையும் எடுத்துரைத்தனர்.



