fbpx
Homeபிற செய்திகள்சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு

சிதம்பரம் அரசு காமராஜர் ஆஸ்பத்திரிக்கு மாவட்ட கலெக் டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வருகை தந்தார்.தொடர்ந்து அவர், ஆஸ்பத்திரி வளாகத்தில் மாவட்ட கனிமவளநிதியின் கீழ் ரூ.5.7 கோடி மதிப்பில் கட்டப் பட்டுவரும் அவசர பிரிவு கட்டி டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார்.அதன்பிறகு புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, பொது மருந்தகம், தொற்றா நோய் மருந்தகம், காது, மூக்கு, தொண்டை பிரிவு, தாய்சேய் வார்டு, அவசர மையம், சமைய லறை உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்தார்.
ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த பொது மக்ளுக்கு மருத்துவமனையால் வழங்கப்ப டும் மருத்துவ சேவைகள் மற்றும் தேவைகள் குறித்து அலுவலர் களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது சிதம்பரம் சப்-கலெக்டர் கிஷன் குமார், நகராட்சி ஆணையாளர் மல்லிகா மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img