கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் தெற்கு மண்டலம் வார்டு எண்கள்.97, 100க்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் சுகாதாரத்தினை கருத்தில் கொண்டு தனிநபர் வீடுகளுக்கு கழிப்பிடம் கட்டுவதற்கு தேவையான உபகரணங்களை மாநகராட்சி ஆணையாளர் பிரதாபிடம் எவரெஸ்ட் இண்டஸ்டீரீஸ் லிமிடெட் நிறுவனத்தினர் சமூக பொறுப்பு நிதியின்கீழ் வழங்கினார்கள்.
உடன் மாநகரப் பொறியாளர் சுகந்தி, செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர் சபரிராஜ் ஆகியோர் உள்ளனர்.