சுற்றுச்சூழலுக்கு உகந்த பெயின்ட்ஸை வழங்கும் ஜே.எஸ்.டபிள்யூ பெயிண்ட்ஸ் நிறுவனம் ஹாலோ வால் ஃபினிஷ்களின் ரேஞ்சுக்கான புதிய தயாரிப்பு பிரசாரத்தை துவங்கியுள்ளது.
இதுகுறித்து ஜே.எஸ்.டபிள்யூ பெயிண்ட்ஸ் இணை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஏ.எஸ் சுந்தரேசன் கூறுகையில், “தங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பது தெரியாமலேயே பெரும்பாலான நுகர்வோர் கண்மூடித்தனமாக வாங்குகின்றனர். சரியான கேள்விகளைக் கேட்கவும் சரியான தேர்வுகளை செய்யவும் நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஹாலோ பிரசாரம்” என்றார்
வணிக சந்தைப்படுத்தும் உலகளாவிய நிறுவனமான டி.பி.டபிள்யூ.ஏ. இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கோவிந்த் பாண்டே கூறியதாவது:
பெரும்பாலான நுகர்வோர் அறியாமையில் வாங்குபவர்களாக இருப்பதோடு, புலனுணர்வு அல்லது கடந்த காலத்தில் பயன்படுத்தியதையே மீண்டும் கொள்முதல் செய்கின்றனர்.
ஜே.எஸ்.டபிள்யூ பெயின்டின் புதுமை கண்டுபிடிப்பு பெயின்ட் வகைகள் மிக உயர்ந்த நன்மைகளை அளிக்கிறது. ஜே.எஸ்.டபிள்யூ பெயின்ட் ஹாலோ பிரசாரம் இந்திய நுகர்வோரை விழிப்படைய செய்து, கேள்விகளை கேட்பதன் மூலம் பெயின்டிலிருந்து அதிக பயன்களை பெறும் ஒரு வழியாகும் என்றார்.



