ஜேசிஐ தர்மபுரி விங்ஸ் சார்பாக கமலம் இன்டர்நேஷனல் பள்ளியில் தேசிய தலைவர் மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடந்த ஆறு மாத காலங்களாக நடந்த நிகழ்வுகளின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் ஜேசிஐயில் இணைவதால் என்ன மாற்றங்களை சமூகத்தில் கொண்டு வர முடியும் இதனால் தனிமனித முன்னேற்றம் எவ்வாறு ஏற்படும் என்பது குறித்து தலைவர் நிவேதினி உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சி தேசிய தலைவர் ரேகேஷ் ஷர்மா மற்றும் மண்டல தலைவர் ஏழுமலை மற்றும் மண்டல உறுப்பினர் தேசிய தலைவர் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் மனோஜ் குமார் மற்றும் ஜே சி ஐ தர்மபுரி விங்ஸ் தலைவர் நிவேதினி தலைமையில் நடைபெற்றது.
இதில் தர்மபுரி விங்ஸ் சின் நிர்வாக இயக்குனர்கள் சீட்ஸ் சரவணன், பிரபாகரன், ஞானவேல், டாக்டர் கலைவாணி, காசிமணி, சந்திரகலா, கங்கா, சபீனா, சஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இறுதியில் மண்டல துணைத்தலைவர் விஜய் கணேஷ் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதில் தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சியில் ஜே சி ஐ ன் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது.