கோவை மாவட்டத்தில் உள்ள 1373 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-&8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் சத்துணவு உண்ணும் 1,03,776 மாணாக்கர்களுக்கு 2024-2025 கல்வியாண்டில் விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டத்தில் விநியோக பணிகள் துவங்க சமூகநல ஆணையர் தெரிவித்ததனை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ராமநாதபுரத்தில் உள்ள பெருமாள் கோவில் வீதியில் உள்ள தொடக்க பள்ளியில் சீருடைகள் வழங்கி விநியோக பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்,அரசு அதிகாரிகள் பள்ளி மாணவ, மாண விகளுக்கு இலவச சீருடைகளை வழங்கினார்கள்.
ஏற்கனவே மாணவர்களுக்கு 10 அளவுகளில் வழங்கி வந்த நிலையில் தையல் சங்க உறுப்பினர்களை கொண்டு அளவெடுத்து 24 முதல் 51 வகையான அளவு களில் மாணாக்கர்களுக்கு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீருடையின் தரத்தை உயர்த்த காலர்களில் கேன்வாஸ் வைத்து தைத்து தரம் உயர்த்தி தைக்கப்பட்டு வருகிறது. அளவு எடுத்த மாணவர்கள் வளர்ச்சி காரணமாக அளவுகள் மாறுபட்டிருந்தால் மாற்றி தரவும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், தொழிற் கூட்டுறவு அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.