fbpx
Homeபிற செய்திகள்ஜப்பான் ஹயாஷி -ஹா கராத்தே கழக மாணவர்களுக்கு வண்ண பட்டைய தேர்வு

ஜப்பான் ஹயாஷி -ஹா கராத்தே கழக மாணவர்களுக்கு வண்ண பட்டைய தேர்வு

ஜப்பான் ஹயாஷி -ஹா கராத்தே கழகத்தின் சார்பாக மாணவர்களுக்கு 48 வது ஆண்டு வண்ண பட்டைய தேர்வு கோவை இடையர்பாளையம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது.
தேர்வுகளை மலேசியாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஹான்ஷி டோனி பொன்னையா நடத்தினார்.

இதில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கராத்தே முறைகளை சிறப்பாக செய்து காட்டினர். தேர்வின் முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அனைவருக்கும் பல்வேறு வண்ண பட்டைகள் தகுதிகளுக்கு ஏற்ப வழங்கப் பட்டது. சான்றிதழ்களை பள்ளியின் தாளாளர் கே.வி.பானுமதி வழங்கினார்.

மாணவர் உடல் நலத்தை மற்றும் மன ஒருமைப்பாட்டை தொடர்ந்து பயிற் சிகள் மூலமாக சிறப்பாக வைத்துக் கொள்ளலாம். கராத்தே இதற்கு உதவும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தேர்வு ஏற்பாடுகளை ஹயாஷி -ஹா தேசிய செயலாளர் ரமேஷ் குமார் சிவராஜ் சன செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img