பெரியநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் துவக்க விழா மற்றும் வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் நிறுவனரும் மற்றும் தலைவருமான சண்முகம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக முனீஸ் குமார் (முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர், தி பிரைம் ஸ்டேட், கோவை), யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் இந்நாள் சேலம் மாவட்ட கரூர் வைசியா வங்கி மேலாளருமான கௌதம் நரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் முனீஸ் குமார் பேசுகையில் இன்றைய மாணவ சமுதாயம் நிறைய சவால்களை சந்தித்து வெற்றி பெறும் சூழலில் இருக்கிறார்கள். எந்த ஒரு செயலை தொடங்கும் போதும் அவர்கள் அந்த செயலில் முழுமையாக அர்ப்பணித்து செயலை செய்தால் வெற்றி நிச்சியமாக தங்கள் வசப்படும்
என்றும் தாங்கள் படித்த துறையிலே வேலை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்காமல் தேசிய மற்றும் மாநில அளவுகளில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று அரசு நிறுவனங்களின் இருக்கும் ஏராளமான பணியிடங்களுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்
என்றும் அறுவுறுத்தினார்.
இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கல்லூரியின் முதல் வர் முனைவர் ராதாகிருஷ் ணன் வரவேற்றார்.