தேசிய கண்தான இரு வார விழாவை ஒட்டி, கோவை வடகோவை மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ். புரம் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் பிபி.ஜி. கண் மருத்துவக் கல்லூரி இணைந்து கண்தான விழிப்புணர்வு மனித சங்கிலி இன்று நடந்தது.
இதனை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் ஜி.சந்திஸ் துவக்கி வைத்தார். டாக்டர் அகர்வால் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் ஜெயஸ்ரீ, கண் மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் பி.பி.ஜி. கண் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இந்த மனித சங்கிலி இயக்கத்தில் கலந்து கொண்டனர்.