fbpx
Homeபிற செய்திகள்கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் ஐம்பெரும் விழா

கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் ஐம்பெரும் விழா

கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறையின் சார்பாக அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தின் ஐம்பெரும் விழா நடைபெற்றது.
இதனை கல்லூரியின் தாளாளர் வெங்கடாசலம் அவர்கள் தலைமை தாங்கினார்.

அனைத் துலகப் பொங்குதமிழ்ச் சங்கத் தலைவர் பாவலர் சுந்தர பழனியப்பன் முன்னிலை வகித்தார்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கவிஞரேறு வாணிதாசன், கவிஞர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களின் வாரிசுகளான கவிமாமணி குலசை அ.வேலுப்பிள்ளை, கவிமாமணி வளர்மதி முருகன், முனைவர் சு.மோதிலால் நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இவ்விழாவில் எஸ்.பி. மருத்துவமனை கோபி, மாலதி தனபால், நடராஜன், தொழிலதிபர் லதா செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விருதினை பெற்றுக் கொண்டனர்.


இதில் தமிழ்த்துறை தலைவர் முனைவர் க. உமாமகேஸ்வரி வரவேற்புரை வழங்க ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் கவிஞர் தருணிகா நன்றியு ரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img