ஜேஎஸ்டபுள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா, இந்தியாவின் முதல் இன்டெலிஜென்ட் சியுவி என்ற புகழுக்குரிய எம்ஜி விண்ட்ஸர், மேனுவல் காம்பேக்ட் எஸ்யுவியின் விலைக்கு இன்று அறிமுகம் செய்திருக்கிறது.
ஒரு செடான் வசதி மற்றும் ஒரு எஸ்யுவியின் விசால இடவசதியை ஒருங்கிணைத்திருக்கும் விண்ட்ஸர், புதுமையான ஏரோ டைனமிக் வடிவமைப்பு, விசாலமான மற்றும் ஆடம்பரமான உட்புற அலங்காரம் மற்றும் பல உயர் தொழில்நுட்ப அம்சங்களை வழங்குகிறது. இந்த சிறப்பம்சங்களின் மூலம், பாதுகாப்பையும், ஸ்மார்ட் இணைப்பு வசதியையும், டிரைவிங் சௌகரியத்தையும் இது உறுதி செய்கிறது.
இது பாஸ்ஸூடன் ரூ.9.99 லட்சம் + பேட்டரிக்கு 1 கி.மீட்டருக்கு ரூ.3.5 என்ற விலையில் எம்ஜி விண்ட்ஸர் வழங்கப்படுகிறது. விண்ட்ஸர் காருக்கு 3-60 அஸ்யூர்டு பைபேக் பிளான் என்ற திட்டத்தையும் ஜேஎஸ்டபுள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா அறிமுகம் செய்கிறது.
ஜேஎஸ்டபுள்யூ எம்ஜி மோட்டார் இந்தியாவின் இயக்குனர் பார்த் ஜிண்டால் இக்கார் பேசுகையில்,
“நமது இந்திய சாலைகளில் எம்ஜி விண்ட்ஸர், கம்பீரமாக பயணித்து, நமது வாடிக்கையாளர்களுக்கு பெருமகிழ்ச்சியளிப்பதை காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்” என்றார்.