சர்வேதேச வில்வித்தை போட்டியில் சிவகங்கை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி ஈரோட்டில் சர்வேதேச அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் தமிழ்நாடு சார்பாக சிவகங்கை மாவட்டத்திலிருந்து சிவன் ஆர்சரி அகாடமி சார்பாக உரிமையாளர் பரமசிவம் மற்றும் பயிற்றுனர் சுரேஷ் சிங்க் தலைமையில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் 4 பிரிவிகளில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் 17 தங்கம், 7 சில்வர், 5 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனர்.



