பெர்க்னர் இந்தியா, சென்னை தாஜ் கன்னிமரா ஹோட்டலில் சிறப்பு டீலர் சந்திப்பை நடத்தியது. இந்நிகழ்வு, விற்பனைத் தொடர்புகளை வலுப்படுத்தவும், புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் இந்திய சமையலறைகளுக்கான ஆரோக்கியமான சமையல் பொருட்களை வழங்கும் பெர்க்னரின் உறுதியை மீண்டும் வலியுறுத்துகிறது.
நிகழ்வின் சிறப்பு அம்சமாக, ‘ஆர்ஜென்ட் கிளாசிக் ப்ரஷர் குக்கர்’ தொடர் வெளியீடு நடைபெற்றது. இந்த வரிசை, நவீன இந்திய சமையலறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 1 லிட்டரிலிருந்து 8 லிட்டர் வரையிலான ப்ரஷர் குக்கர்கள், மற்றும் 3.5 லிட்டர் மற்றும் 5 லிட்டர் ப்ரஷர் பான்கள் இடம்பெறுகின்றன.
இது குறித்து பெர்க்னர் இந்தியாவின் மேலாண்மை இயக்குநர் உமேஷ் குப்தா கூறுகையில்,
“இந்த ஆர்ஜென்ட் கிளாசிக் தொடர் இந்திய சமையலறைகளில் ஆரோக்கியமான மற்றும் கவனமான சமையலை ஊக்குவிக்க உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நாள் தோறும் பயன்பாட்டை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த தொடரின் நோக்கம், சத்தான உணவை பாதுகாத்து வீட்டு சமையலின் மகிழ்ச்சியை அதிகரிப்பதாகும்” என்றார்.
மேலும், இந்நிகழ்வில், தென்னிந்திய உணவுக்கே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் ட்ரை-ப்ளை நான்-ஸ்டிக் சமையல்கருவி தொடர் ஆர்ஜென்ட் சம்ஸாரா தொடரின் தொடர்ந்து நடைபெற்று வரும் வெற்றியும் கொண்டாடப்பட்டது.
இதில் ட்ரை-ப்ளை கட்டமைப்புடன் கூடிய குவாண்டனியம் நான் ஸ்டிக் பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நீடித்த பயன்பாடு, சிறந்த வெப்பக் கட்டுப்பாடு மற்றும் குறைந்த எண்ணெய் பயன்பாட்டை வழங்குகிறது.
இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக, பெர்க்னர் இந்தியா, பாண்டி பஜார் ஏஜிஎஸ் ஹப் மார்ட் மற்றும் பார்க் டவுன் ஆகிய இடங்களில் புதிய பெர்க்னர் கேலரிகளை திறந்து வைத்துள்ளது.



