சிதம்பரம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் முஸ்தபா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு நகரத் தலைவர் அன்வர் அலி தலைமை வகித்தார். கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது ஜகரிய்யா முன்னிலை வகித்தார். நகரச் செயலர் ஜவஹர் மகபூப் ஹுசைன் வரவேற்றார்.மாநில துணைச் செயலர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி,மண்டல துணை ஒருங்கிணைப்பாளர்கள் லால் பேட்டை சல்மான் பாரிஸ், வழக்குரைஞர் அபூபக்கர் ஆகி யோர் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில் முஸ்லிம் யூத் லீக் மாநில துணைத் தலைவர் ஏ.எஸ்.அஹமது, மாவட்டத் தலைவர் முஹம்மது முஸ்தபா, செயலர் நூருல் அமீன் ரப்பானி,சிதம்பரம் நகர துணைத் தலைவர் அப்துல் ரியாஸ், அமைப்புச் செயலர் அப்துல்ஸலாம் நாஸிர், அஜீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 2026 பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியைஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு கேட்டுப் பெற மாநில தலை மையை வலியுறுத்தியும்,ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கி அழித்த இந்திய ராணு வத்துக்கு பாராட்டு தெரி விப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.