fbpx
Homeபிற செய்திகள்கோவை கரி மோட்டார் ஸ்பீட்வேயில் இந்தியன் ரேசிங் லீக் கார் பந்தய போட்டி- கோவா ஏசஸ்...

கோவை கரி மோட்டார் ஸ்பீட்வேயில் இந்தியன் ரேசிங் லீக் கார் பந்தய போட்டி- கோவா ஏசஸ் அணி வீரர் ரவுல் ஹைமன் முதலிடம்

ரேசிங் புரமோஷன்ஸ் நிறுவனத்தால் இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் கார்ப் பந்தயம் கோவை கரி மோட்டார் ஸ்பீட்வே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இந்தியன் ரேஸிங் முதல் சுற்றின் முடிவில், கோவா ஏசஸ் அணியின் ரவுல் ஹைமன், பெங்களூரு கிச்சாஸ் கிங்ஸ் அணியின் கைல் குமரன், சென்னை டர்போ ரைடர்ஸ் அணி யின் அகில் அலிபாய் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

லேசான காற்றுடன் சாரல் மழை இருந்த போதும்,பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள் காரை சீறி பாய விட்டனர்.

ரேஸ் துவங்குவதற்கு முன்பாக கரி மோட்டார்ஸ் ஸ்பீட் வே மைதானத்திற்கு சர்ப்ரைஸ் விசிட்டாக பிரபல நடிகர் நாகசைதன்யா வந்தார்.

அவரை கண்ட கார் பந்தய வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆர்வ முடன் அவருடன் செல்பி எடுக்க குவிந்தனர். தொ டர்ந்து அவர் ஸ்பீட் வே பார்வையாளர் அரங் கில் அமர்ந்து ரேசை கண்டு ரசித்தார்.
விறுவிறுப்பாக நடை பெற்ற இதில் கோவா ஏசஸ் அணிக்காக ஹைமன் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றார்.

கிச்சாவின் கிங்ஸ் பெங்களூருவைச் சேர்ந்த கைல் குமரன் 11வது இடத்தில் இருந்து தொடங்கி 2வது இடத்தில் வெற்றிக் கோட்டைக் கடந்தார்.
சென்னை டர்போ ரைடர்ஸ் அணிக் காக அகில் அலிபாய் சீராக செயல்பட்டு 3வது இடத்தைப் பிடித்தார்.

லேசான மழையுடன் ஈரமான பந்தய டிராக்கில் சீறிப்பாய்ந்த பார்முலா கார் பந்தயத்தை பார்வை யாளர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img