fbpx
Homeபிற செய்திகள்பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டி கோவையில் நாளை தொடங்குகிறது

பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டி கோவையில் நாளை தொடங்குகிறது

கோவையில் 59வது ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பைக்கான ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டி நாளை (23ம் தேதி) முதல் 27 வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது. இப் போட்டிகள் பி.எஸ்.ஜி என்ஜினியரிங் கல்லூரி உள் விளையாட்டு அரங் கில் நடைபெறுகிறது.

இதுகுறித்து பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன், ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் டாக்டர் ருத்ரமூர்த்தி மற்றும் பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறி யதாவது:-
இவ்வாண்டு 59 -வது ஆண்களுக்கான கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் இந்திய கூடைப்பந்து கூட் டமைப்பின் அனுமதி யுடனும், தமிழ்நாடு கூடைப்பந்துகழக குறியீட்டு எண்ணுடனும் நடைபெறவுள்ளது.
இந்த கூடைப்பந்து போட்டிகளில் சென்னை இந்தியன் வங்கி அணி, பெங்களூரு – பேங்க் ஆஃப் பரோடா அணி, புதுடெல்லி – இந்திய விமானப்படை அணி, கோவை ராஜலட்சுமி ஹெச்எஸ்எ போன்ற அணிகளும், பி பிரிவில் டெல்லி இந்திய இராணுவ அணி, சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, லோனாவாலா இந்திய கப்பல் படை அணி, கேரளா மாநில மின்சார வாரிய அணி உட்பட 8 அணிகள் கலந்து கொள் கின்றன.

வெற்றி பெறுகின்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பையும் அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும்.
இதற்கான பரிசளிப்பு விழா 27-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. விழாவில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கு கிறார். மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img