fbpx
Homeபிற செய்திகள்‘இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம் ரூ.11 லட்சம் கோடியை கடந்தது’

‘இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம் ரூ.11 லட்சம் கோடியை கடந்தது’

கடந்த ஜூன் 30 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான நிதிசார் முடிவுகளின்படி, இந்தியன் வங்கியின் உலகளாவிய வணிகம் ரூ.11 லட்சம் கோடியை கடந்திருக்கிறது. நிகர லாபம் முந்தைய ஆண்டைவிட 41% உயர்ந்திருக்கிறது. செயல்பாட்டு லாபம் முந்தைய ஆண்டைவிட 16% அதிகரித்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கியின் நிகர லாபம் ஜூன்’22-ல் ரூ.1213 கோடி என்பதிலிருந்து ஜூன் 23-ல் ரூ.1709 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 41% உயர்ந்திருக்கிறது.
வரிக்கு முந்தைய லாபம் ரூ.1345 கோடி என்ப திலிருந்து ரூ.2394 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 78% உயர்ந்திருக்கிறது.

மொத்த வணிகம் முந்தைய ஆண்டைவிட 9% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது, ரூ.1009454 கோடி என்பதிலிருந்து ரூ.1100943 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது.

மொத்த கடன்கள், ரூ.425203 கோடி என்பதிலிருந்து 13% வளர்ச்சி பெற்று ரூ.479404 கோடியாக அதிகரித் திருக்கிறது. முடிவடைந்த காலாண்டுகளில் செயல் பாட்டின் மீதான ஒப்பீட்டின்படி, நிகர லாபம் ரூ.1447 கோடி என்பதிலிருந்து ரூ.1709 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 18% உயர்ந்திருக்கிறது

3 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் (DBUs) உட்பட உள்நாட்டில் 5798 கிளைகளைக் கொண்டிருக்கிறது. இக்கிளைகளுள் 1970 கிராமப்புறங்களிலும், 1517 சிறு நகரங்களிலும், 1168 நகர்ப்புறங்களிலும் மற்றும் 1143 பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. இவ்வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகளும் மற்றும் ஒரு IFSC பேங்கிங் யூனிட்டும் இருக்கிறது.

4804 ஏடிஎம்கள் மற்றும் பிஎன்ஏ-களையும் மற்றும் 10805 பிசினஸ் முகவர்களையும் (BCs) கொண்டு செயலாற்றுகிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்துவது, பிரத்யேகமாக உருவாக்கப்படும் இனிய அனுபவங்களை வழங்குவது மற்றும் வாடிக்கை யாளர்களது பிரச்சனைகளை சுய முனைப்புடன் தீர்ப்பது ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளரது திருப்தியை மேம்படுத்த அர்ப்பணிப்போடு செயலாற் றுகிறோம் என்று இந்தியன் வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img