கோவை மாவட்டம், துடியலூர் அரசு ஆண்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள டாடா தொழில்நுட்ப மையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருகில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ், மண்டல பயிற்சித்துறை இணை இயக்குநர் முஸ்தபா, கோவை அரசினர் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் லீமா ரோஸ், நிலைய மேலாண்மை குழு தலைவர் நரேந்திரன் ஆகியோர் உள்ளனர்.