Homeபிற செய்திகள்கராத்தே, சிலம்பம், யோகா, கால்பந்து, பாக்சிங் போட்டி: 16 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கல...

கராத்தே, சிலம்பம், யோகா, கால்பந்து, பாக்சிங் போட்டி: 16 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கல பதக்கம் வென்று அசத்திய கோவை மாணவர்கள்

கேரளம் மாநிலம் மூணாரில் உள்ள கேரளா ஸ்போர்ட்ஸ் கவுன்சில் HATCஇல் கடந்த செப்டம்பர் 26 முதல் 28 வரை 30 வது SGADF தேசிய சாம்பியன்ஷிப் – 2026 போட்டி நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியை சேர்ந்த நேடிவ் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் பெடரேஷன் மற்றும் வருண் மார்டியல் ஆர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவர்கள் பலர் போட்டியில் வெற்றி பெற்று தமிழ் நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த தேசிய அளவிலான போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த விளையாட்டு வீரர்கள், கராத்தே, சிலம்பம், யோகா, கால்பந்து, பாக்சிங் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்குபெற்றனர். இதில் கோவை மாணவர்கள் சிலம்பத்தில் 13 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களும், தடகளத்தில் 2 தங்கமும், கராத்தே போட்டியில் தலா 1 தங்கபதக்கமும் பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img