Homeபிற செய்திகள்காவேரி மருத்துவமனையின் பேமிலி கிளினிக் துவக்கம்

காவேரி மருத்துவமனையின் பேமிலி கிளினிக் துவக்கம்

சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை அதன் ஓராண்டு ஆண்டு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது. இந்நிலையில், குடும்பங்களுக்கு மிதமான கட்டணங்களில் முழுமையான சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் “பேமிலி கிளினிக்கை” அம்மருத்துவமனை தொடங்கியிருக்கிறது. 

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயது பிரிவினருக்கும் மற்றும் சமுதாயத்தின் பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த அனைவருக்கும் உயர்தர மருத்துவ சேவையை வழங்க வேண்டுமென்ற இம்மருத்துவமனையின் பொறுப்புறுதிக்கு இந்நிகழ்வு நேர்த்தியான சான்றாக இருக்கிறது.

காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும் இந்த பேமிலி AOQA, ரூ.200 என்ற மிகக்குறைவான கட்டணத்தில் சேவையை வழங்குகிறது. 

இதில் டாக்டர். சுஜாதா, கிளினிக்கல் லீட் – குடும்ப மருத்துவம், டாக்டர். வைபவ் சுரேஷ், இணை மருத்துவர் – குடும்ப மருத்துவம் ஆகியோரை உள்ளடக்கிய சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு, குடும்பத்திலுள்ள அனைத்து வயது பிரிவிலும் உள்ள நோயாளிகளுக்கு தனிப்பட்ட சிகிச்சையையும், பராமரிப்பையும் வழங்கும். 

படிக்க வேண்டும்

spot_img