fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாட்டில் ஐ.ஐ.எப்.எல் பைனான்ஸ் 40 புதிய கிளை திறப்பு

தமிழ்நாட்டில் ஐ.ஐ.எப்.எல் பைனான்ஸ் 40 புதிய கிளை திறப்பு

ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் தமிழகத் தில் தங்களுடைய தொழிலை விரிவுபடுத்த திட்ட மிட்டுள்ளது, 100 சதவீத வளர்ச்சியை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது

இந்தியாவின் முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனமான ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட புதிய கிளைகளைத் திறக்கவும், அடுத்த ஓராண்டில் 2500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

தற்போது ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல நகரங்கள், சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்கள் என பரவியுள்ள 177 கிளைகள் மூலம் செயல்பட்டு வருகிறது.

இது குறித்து ஐ.ஐ.எப்.எல்., பைனான்ஸ் தங்க நகைக் கடன்கள் பிரிவின் தமிழக மண்டல வர்த்தக தலைவர் கார்த்திக், ஐ.ஐ. எப்.எல்., பைனான்ஸ் நிறு வனத்தின் தங்கநகைக் கடன் கள் பிரிவின் தலைவர் சவுரப் குமார்ஆகியோர் கூறியதாவது:

ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் இந்தியா முழுவதும் 4,400 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது, இது 85 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. ஐ.ஐ. எஃப்.எல் பைனான்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய தங்கநகைக் கடன் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

இது ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்றது மற்றும் கடன் பெறுபவர்களின் தங்கத்திற்கு மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் காப்பீட்டை வழங்குகிறது.

ஐ.ஐ.எஃப்.எல் பைனான்ஸ் தமிழ்நாட் டில் உள்ள அதன் தங்கநகைக் கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைந்த விலை திட்டங்களில் ஒன்றை வழங்குகிறது.

தொழில் முனைவோர் மற்றும் கடன் பெறுபவர்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஐஐஎஃப்எல் பைனான்ஸ் இப்போது மாதத்திற்கு 99 பைசா பைசா என்ற மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் தங்கநகைக் கடன்களை வழங்குகிறது மறைமுகக் கட்டணங்கள் எதுவும் கிடையாது.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img