பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் தொழில் நுட்பக் கல்லூரியில் இன்ஜினியர்ஸ் டே பொறியாளர்கள் தின விழா கொண்டாடப் பட்டது.
உலகின் பல நாடுகள் பொறியாளர் தினத்தை பல்வேறு நாட்களில் கொண் டாடுகிறது.
நமது இந்தியாவில் பொறியாளர் தினமானது மறைந்த பாரத ரத்னா விருது பெற்ற மோக்சகுண்டம் விஸ்வேஸ்வர அய்யாவை கௌரவிக்கும் விதமாக செப்டம்பர் 15ஆம் தேதி பொறியாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த விழாவிற்கு நோவா டெக் நிறு வனத்தின், வணிக மேம்பாட்டு மேலாளர் செந்தில் முருகன் கலந்து கொண்டு பொறியியல் படிக்கும் மாணவர்கள் உலக அளவில் நிகழும் மாற்றங்களுக்கு இணையாக தங்களது அறிவை வளர்த்துக் கொண்டு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பொறியாளர் தினத்தை ஒட்டி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக ஒவ்வொரு துறையிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் பொறியாளர். சண்முகம், முதல்வர் பொறியாளர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.