காங்கேயம் இன்ஸ்டிடியூட் ஆஃப் காமர்ஸ் கல்லூரியில் மாணவர்களுக்கான ஐசிஎஸ்ஐ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ஜி.சுரேஷ், பி.காம்.சி.எஸ் துறைத்தலைவர் எஸ். குருநாதன், ஐ.சி.எஸ்.ஐ.யின் எஸ்.ஐ. ஆர்.சி. பிரிவு (கோவை) துணைத் தலைவர், சி.எஸ். ஜி. யுவராஜ் ஐ.சி.எஸ்.ஐ.யின் எஸ்.ஐ.ஆர்.சி. கோவை பிரிவு தலைவர், பயிற்சி நிறுவன செயலாளர் மற்றும் பட்டய கணக்காளர் சி.எஸ். சி. சகுந்தலா சி.எஸ்.எஸ்.விஜய்மகேந்திரன் மற்றும் சி.எஸ்.வி. ரமேஷ் ஐசிஎஸ்ஐ குறித்து தெளிவான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் காங்கேயம் கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.வி.மகேந்திர கௌடா முன்னிலையில் கல்லூரியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆங்கிலத்துறைத் தலைவர் கவிதா நன்றி கூறினார்.



