பள்ளி கல்வி துறையால் நடத்தப்படும் கோவை மாவட்ட அ ‘ குறுமைய போட்டிகள் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 24ம் தேதி துவங்கியது. இதில் ஐம்பதிற்கும் மேற் பட்ட பள்ளிகள் கலந்து கொண்டுள்ளன.
முதல் இரண்டு நாட்கள் பெண்களுக்கான போட்டிகளும் அடுத்த மூன்று நாட்கள் மாணவர் களுக்கான போட்டிகளும் நடைபெற்றது. இதில் கிக் கானி பள்ளி மாணவ மாணவிகள் கால்பந்து , கைப்பந்து (ஹான்ட்பால்), ஹாக்கி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
போட்டியில் பங்கெடுத்த 234 மாணவ, மாணவியர் பதக்கங்களை பெற்றனர். கால்பந்து, ஹாக்கி, கைபந்து பிரிவுகளில் மாணவ ,மாணவிகள் வெற்றி கோப்பைகளை கைப்பற்றினர்.
இதில் சிறப்பம்சமாக கால்பந்து போட்டியில் கடந்த 21 வருடங்களாக கிக்கானி பள்ளி ஏதோ ஒரு பிரிவில் வெற்றி பெற்று கால்பந்தாட்டத்தில் முடிசூடா மன்னனாக திகழ்கின்றது.
ஹாக்கியிலும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வெற்றி பெறுவது குறிப் பிடத்தக்கது. மாணவிகள் கால்பந்து ஆட்டத்தில் அக்ஷயா, ரக்ஷனா, பதர்நிஷா, ஆர்னிகா, இலக்கியா ,அமிர்தா, நிகித்தா, தீர்த்தா ஆகியோரும் ஷாக்கியில் சத்திபிரியா, அரிநிவேதா, வித்யா, வைஷ்ணவி , பாரதி, கௌசிகா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்
மாணவர்கள் கால்பந் தாட்டத்தில் மௌனேஷ், சஞ்சய், கோகுல், சுதர்சன், ஆசிக், திவாகர், ரத்தீஷ், சாய் சபரி, சூரியா, கிர்லோக், அரவிந்த, உதய் ,சாய் சாரதி, நவீன் , அப்துல் மற்றும் கோல்கீப்பர்கள் மின்சாத், ஈசான் ஆகி யோரும். ஷாக்கியில் பிரியன், விக்னேந்திரன், சௌந்தர்யன், பிரியன், விக் னேஷ் ,மருது ,சரவணன், அருண் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கிக்கானி பள்ளி மாணவ மாணவிகள் கால்பந்து மற்றும் ஹாக்கியில் மாநில, தேசிய போட்டிகளிலும் பங்கு பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ,மாநில போட்டிகளில் பெற்ற சான்றிதழ்களை கொண்டு மேற்படிப்புக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் கட்டண சலுகைகளையும் , வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் பெறுகின்றனர்.
இதனால் பல ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெருகின்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ,தலைமை ஆசிரியர் ஆனந்தி , பயிற்சியாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஜேம்ஸ் கென்னடி, உடற்கல்வி இயக்குனர் சிபி ஆகியோர் பாராட்டினர்.