ஐபிசிஏ லேபரட்டரீஸ் உடன் இணைந்து வேர்ல்டு ஹைபர்டென்ஷன் லீக் சென்னையில், உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
இந்நிகழ்ச்சி, ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெறச் செய்யும் முயற்சியாக, செட்டிநாடு வித்யாஸ்ரமத்தில் ‘ரத்த அழுத் தத்தை கண்டறியுங்கள், கட்டுப்பாட்டில் வைத்திருங்கள், நீண்ட காலம் வாழுங்கள்’ என்னும் ‘உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய வாக்கியம்’ கொண்ட 55அடி அகலம் மற்றும் 12 அடிஉயரம் கொண்ட வண்ண பேனர் இடம் பெற்றிருந்தது.
வேர்ல்டு ஹைபர்டென்ஷன் லீக் உலகளவில் உயர் ரத்த அழுத்தத்தைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் அரசு சாரா அமைப்பாகும்.
உயர் ரத்த அழுத்தம் என்பது ஒரு தொற்றா நோயாகும். இது உலகளவில் இறப்பு மற்றும் இயலாமைக்கான முக்கிய நோயாக இருந்து வருகிறது.
வேர்ல்டு ஹைபர்டென்ஷன் லீக்
வேர்ல்டு ஹைபர்டென்ஷன் லீக் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.என். நரசிங்கன் கூறுகையில், நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் உயிருக்கு ஆபத்தான பல இதய சிக்கல் களுக்கு வழிவகுக்கும் உயர் ரத்த அழுத்த அபாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
ஏனெனில் பலர் அது தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் உயர் ரத்த அழுத்த நோயை புறக்கணிப்பதோடு, அதற்கு முறையான சிகிச்சை எடுக்காமல் விட்டுவிடுகின்றனர் என்றார்.
இந்தியாவை மையமாகக் கொண்ட தென்கிழக்கு ஆசியாவில் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் நான்கு பெரியவர்களில் ஒரு வருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகவும், ஆனால், அவர்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துள்ளனர் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
வரும் 2025-ம் ஆண்டுக்குள் உயர் ரத்த அழுத்தத்தை 25 சதவீதம் குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு மருத்துவமனைக ளைச் சேர்ந்த 200 டாக்டர்கள், 300 நோயாளிகள் பங்கேற்றனர்.