தமிழகத்தில் அனைத்து குற்ற செயல் களுக்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கும் மதுக்கடைகளை மூட வலியு றுத்தி நாம் தமிழர் கட்சி மகளிர் அணி சார்பில் நேற்று தமிழக முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் அடிப்படையில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக் கறிஞர் நன்மாறன் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து ஆட்சியரை சந்தித்து மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மனு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் மதுக்கடைகள் மூலமாக பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது.
தமிழகத்தில் இளைஞர்களை சீரழிக்கும் போதை வஸ்துகளான குட்கா, புகையிலை, கஞ்சா, மது, கள்ளச்சாராயம் போன்றவைகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், அதனால் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம், என்றார்.