கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர் நிலைப்பள் ளியில் “குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்“ அனுசரிக்கப்பட்டு உறுதி மொழி எடுத்து கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டு குழந்தை தொழி லாளர் ஒழிப்பு தினத்தின் மைய கருத்து “குழந்தை தொழிலாளர் விநியோக சங்கிலியை ஒழிப்பது ஆகும். உலகளவில் 21.5 கோடி குழந்தைகள், முழுநேர தொழிலாளர்களாக உள்ளனர்.
அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், விளையாட முடியாமலும், அறிவை வளர்த்து கொள்ள முடியாமலும் அவதி பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.
குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான தீமையை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதியன்று குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
150 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத் தினர் தங்கள் உடல், மன, சமூக அல்லது கல்வி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பகுதிகளில் பணிபுரிந்து வருவதால், அதைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவது அவசியம்.
குழந்தைத் தொழில்களால் தனிநபர்களுக்கு ஏற்படும் தீங்குகள், குறிப்பாக போதைப்பொருள் கடத்தல், பாலியல் வர்த்தகம் மற்றும் ஆயுத மோதலில் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைப் பற்றி அதிக விழிப்புணர்வைப் பரப்புவது நமது கடமை இதன் மூலம் குழந்தைத் தொழில்களால் ஏற்படும் மன மற்றும் உடல்ரீதியான பாதிப்புகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க நிறுவப்பட வேண்டிய முறையான வழிகாட்டுதல்களை இந்த நாள் வலியுறுத்துகிறது. குழந்தைத் தொழிலாளர் முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலகளாவிய குழந்தைத் தொழில்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான உறுதியான சமூகப் பாதுகாப்பை நிறுவுவதற்கான சமூகப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் திட்டங்களில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்பது இதன் பொருளாகும்.
இதையொட்டி கோவை புலிய குளம் புனித அந்தோணியார் உயர் நிலைப்பள்ளியில் இந்த நிகழ்வில் அருட்பணி ஞானப்பிரகாசம் உட்பட அனைத்து ஆசிரியர் ஆசிரியைகளும் மாணவர்களும் கலந்துக் கொண்டார்கள்.